Connect with us

மார்ச் 2-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! பொருட்காட்சிகள் நடத்த அனுமதி!!

ஊரடங்கு

News

மார்ச் 2-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! பொருட்காட்சிகள் நடத்த அனுமதி!!

மார்ச் 2-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! பொருட்காட்சிகள் நடத்த அனுமதி!!

இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். ஏனென்றால் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு பிப்ரவரி 15-ம் தேதியோடு நிறைவுக்கு வருகிறது.

இதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்த்திருந்தனர். அதன்படி மழலையர், நர்சரி பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் பதிலாக 200 பேர் கலந்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது அறிவித்துள்ள ஊரடங்கு மார்ச் 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் மார்ச் 2-ஆம் தேதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இறுதி ஊர்வலத்தில்  100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் பொருட்காட்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top