போன வேகத்தில் திரும்பி வந்த கொரோனா! மீண்டும் ஊரடங்கு அறிவித்த சீனா!

உலகெங்கும் மிகுந்த அச்சத்தை உருவாக்கிய கொரோனா நோயின் பிறப்பிடமாக காணப்படுகிறது சீனா. 2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட இந்த கொரோனா நோயானது இறுதியில் உலகம் முழுவதும் பரவியது.

கொரோனா
 

இவ்வாறிருக்கையில் சீனாவில் கொரோனா  நோய் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது சில நாட்களாகவே சீனாவில் இந்த கொரோனா நோயின் பரவல் அதிகரிக்க தொடங்கியது. இதனால் சீன அரசு பள்ளிகளை முழுமையாக மூட உத்தரவிட்டிருந்தது.

அதோடு மட்டுமில்லாமல் விமான சேவையை ரத்து செய்தது. இந்நிலையில் சீனாவில் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் உள்ள ஐந்து மாகாணங்களில் மீண்டும் இந்த கொரோனா   தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இந்த கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் சீனாவில் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சீனாவில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீனாவில் உள்ள  லான்ஜோ  நகரில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு வெளியிட்டுள்ளது. ஏனென்றால் இந்த லான்ஜோ பகுதியில் கொரோனா வேகம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வேறு வழி தெரியாமல் அந்த லான்ஜோ பகுதியில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்த பட்டுள்ளன

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment