தேவையின்றி வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்- தமிழ்நாடு காவல்துறை

சுமார் 200 நாட்களுக்கு பின் தற்போது பரவி வரும் ஓமிக்ரானை கட்டுப்படுத்த லாக் டவுன் போடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு நேர லாக் டவுன் இன்று முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் யாரும் வெளியே வந்து சுற்றக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லாக் டவுன் போடப்பட்டாலும் வயது வந்த பலர் சும்மா இருப்பதில்லை பைக் எடுத்துக்கொண்டு ஊர் சுற்றுகிறேன் என ஊர் சுற்றி வருவர் கிரிக்கெட் விளையாடுகிறேன் என மைதானத்தில் வலம் வருவர்.

இது போல செய்பவர்களை போலீஸ் கடுமையான தண்டனை கொடுத்து தண்டித்தாலும் அவர்கள் பேச்சை கேட்பதில்லை.

இந்நிலையில் காவல்துறை வெளியிட்டுள்ள முக்கிய குறிப்பில் தேவையில்லாமல் வெளியே வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏற்கனவே இன்று யாரேனும் சுப நிகழ்ச்சிகள் வைத்திருந்தால் அதை நடத்த தடை இல்லை என்றும் மருத்துவம் மற்றும் அவசர வேலைகளுக்கு தகுந்த ஆதாரங்களை சொல்லி செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment