Connect with us

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை: உள்ளாட்சி தேர்தலில் வெற்றி யாருக்கு?

vote 1280

Tamil Nadu

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை: உள்ளாட்சி தேர்தலில் வெற்றி யாருக்கு?

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை: உள்ளாட்சி தேர்தலில் வெற்றி யாருக்கு?

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 ஊரக உள்ளாட்சிகளுக்கு அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் இன்னும் ஒரு சில நிமிடங்களில் முன்னிலை நிலவரம் மற்றும் வெற்றி-தோல்வி நிலவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது

இந்த தேர்தலில் அதிமுக திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் போட்டியிட்டு உள்ளன என்பதும், அதேபோல் சுயேட்சை வேட்பாளர்கள் அதிக அளவில் போட்டியிடுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதிமுக மற்றும் திமுக ஆகிய இடையேதான் கடுமையான போட்டி நிலவி வருவதாகவும் ஆளுங்கட்சியான திமுக உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top