ஜனவரி 5 ஆம் தேதி விடுமுறை: மாவட்ட கலெக்டர் அதிரடி அறிவிப்பு!

ஜனவரி 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகள் காரணமாக அந்தந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளுர் விடுமுறை என மாவட்ட கலெக்டரால் அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஜனவரி 5ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஜனவரி 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் இயங்காது என்றும் அதற்கு பதிலாக பிப்ரவரி 25-ஆம் தேதி வேலை நாள் அன்று வேலை நாள் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று காலை மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது என்பதும் இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.