மார்ச் 7- ஆம் தேதி உள்ளூர் விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அதிரடி !!

ஒவ்வொரு ஆண்டும் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வருகின்ற மார்ச் 7- ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா மற்றும் தேரோட்டம் மிக நடைபெறுவதால் தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்வர்.

அந்த வகையில் மேல்மலையனூர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற 7- ஆம் தேதி நடைபெற இருப்பதால் அம்மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி, கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விடுமுறையை ஈடுசெய்ய மார்ச் 19-ந்தேதி வேலை நாட்களாக செயல்படும் என மாவட்ட கலெக்டர் மோகன் அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment