வரும் மார்ச் 4 தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

ஒவ்வொரு ஆண்டும் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் ஜெயந்தி நாளான மாசி 20-ந் தேதியை அய்யா வழி பக்தர்கள், அய்யா வைகுண்டர் அவதார தின விழாவாக கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு வைகுண்டர் அவதாரதினவிழா வருகிற 4-ந் தேதி (வெள்ளிக் கிழமை) கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்நாளில் அரசு தேர்வுகள் இருந்தால் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவித்தார்.

மேலும், இந்த விடுமுறைக்கு ஈடாக வரும் மார்ச் 12-ம் தேதி வேலை நாளாக செயல்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment