Connect with us

16ஆம் தேதி புதுச்சேரியில் உள்ளூர் விடுமுறை! ஆனால் திருப்புதல் தேர்வு உண்டு!!

உள்ளூர் விடுமுறை

செய்திகள்

16ஆம் தேதி புதுச்சேரியில் உள்ளூர் விடுமுறை! ஆனால் திருப்புதல் தேர்வு உண்டு!!

16ஆம் தேதி புதுச்சேரியில் உள்ளூர் விடுமுறை! ஆனால் திருப்புதல் தேர்வு உண்டு!!

நம் தமிழகத்தை போன்றே காணப்படும் ஒரு மாநிலம் என்றால் அதனை புதுச்சேரி என்று கூறலாம். புதுச்சேரி மாநில மட்டுமின்றி யூனியன் பிரதேசமாகவும் காணப்படுகின்றது. புதுச்சேரியில் பெரும்பாலும் தமிழக மக்களே வசிக்கின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் வருகின்ற புதன்கிழமை உள்ளூர் விடுமுறை விடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகிறது. அதன்படி மாசிமக திருவிழாவையொட்டி 16ஆம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பிப்ரவரி 16ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை போன்றே புதுச்சேரியிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது.

அதிலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அன்று திருப்புதல் தேர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திருப்புதல் தேர்வில் மாற்றம் இல்லை என்றும் தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி 16ஆம் தேதி மாசிமகம் உள்ளூர் விடுமுறையாக இருந்தாலும் பன்னிரண்டாம் வகுப்புக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top