தமிழ் வருடத்தில் தற்போது ஆடி மாதம் நிகழ்கிறது. பொதுவாக ஆடி மாதம் தொடங்கினால் பல இடங்களில் அடுத்தடுத்து கோவில் கும்பாபிஷேகங்கள், திருவிழாக்கள் நடைபெறும். ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் கூல் ஊற்றப்படும். இதனால் பல இடங்களில் உள்ளூர் விடுமுறைகள் தொடர்ந்து அளிக்கப்படும்.
அந்த வகையில் நேற்றைய தினம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வருகின்ற செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். ஏனென்றால் நேற்று தூத்துக்குடியில் பரலோக பணிமயமாதா கோவிலில் கொடியேற்றம் நிகழ்ந்தது.
இந்த நிலையில் தற்போது மற்றும் ஒரு கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் ஒன்றாம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.
ஏனென்றால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் பகுதியில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா நடப்பதால் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதி விடுமுறையை ஈடு செய்ய ஆகஸ்ட் 13 ஆம் தேதி பணி நாளாக அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.