நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தலங்களில் ஒன்றான சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் மாசி 20ம் தேதி கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில் நாளை 189வது பிறந்தநாளை அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. இதனிடையே நாளை பிற்பகல் 3 மணிக்கு சாமிதோப்பு தலைமை பதியில் இருந்து ஆதலவிளக்கு மகாதீப ஊர்வலம் நடைபெறுகிறது.

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் , பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் , அலுவலக நிறுவனங்கள் , வங்கிகள் மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment