கேரள மாநிலத்தில் ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக அம்மாநிலம் முழுவதும் மஞ்சள், ஆரஞ்சு வண்ணங்களில் கண்களுக்குக் குளிர்ச்சியாக சாமந்திப் பூக்கள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு வருகின்ற 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி அறிவித்துள்ளார்.
இதனிடையே அன்றைய தினத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வருகின்ற செப்டம்பர் 17-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இத்தகைய அறிவிப்பினால் மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.