மார்ச் 4- ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அதிரடி!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி மார்ச் மாதம் 4- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதனிடையே நெல்லையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் அடுத்த மாதம் பொதுத்தேர்வு மற்றும் முக்கிய தேர்வுகள்கள் நடைபெறுவதாக இருந்தால் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதாவது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலக நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  உள்ளூர் விடுமுறையானது வங்கிகள் , மாவட்ட அலுவலகங்களுக்கு பொருந்தாது என்றும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு 12ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment