குஷியோ குஷி! நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!!

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

நீலகிரியில் ஆண்டுதோறும் தை மாதத்தில் ஹெத்தை ஹப்பா எனப்படும் ஹெத்தையம்மன் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பண்டிகை கொண்டாடப்படாமல் இருந்து வந்தது.

டேங்கர் லாரி – அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: 15 பேர் படுகாயம்!

இந்த சூழலில் தொற்று பரவல் குறைந்து காணப்படுவதால் அனைத்து திருவிழாக்களையும் கொண்டாட அரசு அனுமதி அளித்திருந்தது, இந்த சூழலில் நாளைய தினத்தில் ஹெத்தையம்மன் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவில் வள்ளிக்கரை, மஞ்சுதாளை, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி, காரக்கொரை, போத்தனெட்டி, பேரொட்டி உள்ளிட்ட 8 கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களின் பாரம்பரிய உடை மற்றும் வண்ண குடைகளுடன் அம்மனை வழிபடுவார்கள்.

தீண்டாமை விவகாரம்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி!

இதன் காரணமாக நாளை கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகின்ற ஜனவரி 21-ம் தேதி வேலை நாட்களாக செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.