Tamil Nadu
9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டபோது 9 மாவட்டங்களில் மட்டும் ஒருசில காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை. இதுகுறித்த வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் பதிவான நிலையில் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடக்காத 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அடுத்து விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
