News
உள்ளாட்சித் தேர்தல்! காங்கிரஸ் கட்சிக்குள்ளே நாற்காலி பறக்க மோதல்!!
தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தது. அதன் கூட்டணியில் முக்கியமான கட்சியாக காணப்பட்டது காங்கிரஸ். மேலும் இந்த கூட்டணி நடக்கவிருக்க உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் இணைந்து போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் பிரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களிடையே தற்போது திடீர் மோதல் நடைபெற்றுள்ளது. அதன்படி சிவகங்கை தேவகோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் மோதிக் கொண்டனர். மேலும் இதில் கார்த்திக் சிதம்பரம் முன்னிலையில் இவர்கள் மோதி கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனையின் போது வாக்குவாதம் முற்றி இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். மேலும் அங்குள்ள நாற்காலிகளை தூக்கி எறிந்து அடித்துக் கொண்டு உள்ளனர். இதன் விளைவாக வினோத் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இதனால் எம்பி முன்னிலையிலேயே தற்போது கட்சி உறுப்பினர்கள் மோதிக் கொண்டுள்ளது கட்சிக்குள்ளேயே குழப்பத்தை உருவாக்கி உள்ளது.
