திமுகவில் நிகழ்ந்த இழப்பு; உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு-தேர்தல் அலுவலர் அறிவிப்பு!
இந்த வாரம் சனிக்கிழமை நம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. அதிலும் குறிப்பாக வேட்பாளர்கள் விதவிதமான முறைகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை விட தேர்தல் அதிகாரிகள் அதிதீவிரமாக தங்களது பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 90 சதவீத தேர்தல் பணிகள் நிறைவு பெற்று உள்ளதாக காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்படுகிறது.
குறிப்பாக கடந்த வாரம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு வார்டில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சியின் இரண்டாவது வார்டில் மட்டும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.
வத்திராயிருப்பு பேரூராட்சியின் இரண்டாவது வார்டு திமுக வேட்பாளர் முத்தையா மரணமடைந்த நிலையில் அந்த வார்டில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
