Connect with us

உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெறும் திமுக: பெரும் பின்னடைவில் அதிமுக!

admk dmk

Tamil Nadu

உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெறும் திமுக: பெரும் பின்னடைவில் அதிமுக!

உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெறும் திமுக: பெரும் பின்னடைவில் அதிமுக!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று வருகிறது என்பதும் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது என்பதும் முன்னிலை நிலவரங்கள் தெரிவித்து வருகின்றன.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தினங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆரம்பம் முதலே திமுக முன்னிலை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் வரை திமுகவின் 191 ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் முன்னிலை வகித்து வருகின்றனர் என்பதும் அதிமுகவின் 23 கவுன்சிலர்கள் மட்டுமே முன்னிலை வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 67 திமுக வேட்பாளர்களும் 4 அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் பாமக 6 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது என்பதும் அமமுக ஒரே ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கம்போல் நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top