Connect with us

கொடுத்த கடனை கேட்டது குத்தமா?- திமுக பிரமுகர் அட்ராசிட்டி!!

Capture 11

தமிழகம்

கொடுத்த கடனை கேட்டது குத்தமா?- திமுக பிரமுகர் அட்ராசிட்டி!!

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடன் கொடுப்பது என்பது வாடிக்கையாக அமைந்துள்ளது. இந்நிலையில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்கும் போது பலவித அசம்பாவிதங்கள் நேரிடுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் கடனை திருப்பி கேட்ட நபரை அரிவாளால் வெட்ட முயன்ற திமுக கவுன்சிலரின் கணவரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய தி.மு.க கவுன்சிலர் நித்தியா என்பவரின் கணவர் வெற்றிச்செல்வன் அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது.

இந்த சூழலில் கொடுத்த கடனை குணசேகரன் அடிக்கடி கேட்டதாக தெரிகிறது. ஆனால் வெற்றிச்செல்வன் கடனை திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார். இதனால் நேற்று உறவினர்களுடன் குணசேகரன் வெற்றிச்செல்வன் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.

அப்போது மதுபோதையில் இருந்த இருந்த வெற்றிச்செல்வன், குணசேகரனை தகாத வார்த்தைகளால் பேசியது மட்டுமல்லாமல்அரிவாளை எடுத்து குணசேகரனை வெட்ட முயன்றுள்ளார்.  இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் வெற்றிச்செல்வனை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top