இனிமேல் இசேவை மையத்திலேயே எல்.எல்.ஆர் மற்றும் லைசென்ஸ்: சூப்பர் தகவல்!

தற்போது எல்எல்ஆர் மற்றும் லைசென்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டிய நிலை இருக்கும் நிலையில் இனி வெகு விரைவில் இ சேவை மையத்தில் அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

எல்எல்ஆர் எனப்படும் பயிற்சி ஓட்டுனர் உரிமம் மற்றும் லைசென்ஸ் எனப்படும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை பெறுவதற்காக இதுவரை ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டு அதற்கான இணைய தளம் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில் இணையதள வசதி இல்லாதவர்கள் ஆர்டிஓ அலுவலகம் சென்று வரும் நிலையில் தற்போது இ-சேவை மையத்தில் எல்.எல்.ஆர்ர் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெகு விரைவில் ஓட்டுநர் உரிமமும் இ சேவை மையத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்ற முறை அறிமுகமாக இருப்பதாகவும் இதனால் ஆர்டிஓ அலுவலகத்தில் மக்கள் வரும் கூட்டம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 300 இசேவை மையங்கள் மூலம் இந்த வசதியை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே எல்எல்ஆர் மட்டுமின்றி ஓட்டுனர் உரிமத்தையும் வெகு விரைவில் இ சேவை மையத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.