பார்சலில் பல்லி! சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் மயக்கம்! அலறியடித்த தாய்!!

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற பிரச்சனை நம் தமிழகம் எங்கும் தற்போது பரவலாக காணப்படுகிறது. உணவகங்களிலும், உணவுகளிலும் கலப்படம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் பலரும் அவதிப்படுவது மட்டுமில்லாமல் ஒரு சில நேரங்களில் உயிரிழப்புகளும் நிகழ்கிறது. பார்சலில் பல்லி

இந்த நிலையில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தை பதைபதைக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் உணவகத்தில் சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கலைவாணி என்பவர் தனது 2 குழந்தைகளுடன் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு பார்சல் வாங்கி சென்றுள்ளார்.

வீட்டுக்கு சென்ற சில மணி நேரத்தில் மகன் ஆகாஷ், மகன்  சுலோச்சனா மயக்கம் அடைந்துள்ளனர். இதனால் உணவகத்தில் இருந்து வாங்கி வந்த பார்சலை சோதித்ததில் அதில் பள்ளி இறந்து கிடந்தது தெரியவந்தது.

பார்சலை பார்த்து அதிர்ச்சிக்குள்ளான அந்த குடும்பத்தினர் விரைந்து இரண்டு குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment