மட்டன் பிரியாணியில் பல்லி.. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்.. நடந்தது என்ன?
சென்னை புரசைவக்கம், சரவணா ஸ்டோர்ஸ் அருகே இருக்கிறது பிரபல பிரியாணி கடை. இந்த கடையில் நேற்று அப்பாஸ் என்ற இளைஞர் பிரியாணி சாப்பிட்டார். அப்போது பிரியாணியில் பல்லி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அப்பாஸ் பேசியதாவது:
நான் தனது சொந்த வேலைக்காக புரசைவக்கம் வந்ததாகவும் பின்னர் மதிய உணவிற்காக பிரபல ஹோட்டலுக்கு சென்று மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டதாகவும் தெரிவித்தார். அப்போது அதில் பல்லி இருந்ததாக கூறினார்.
இதை பற்றி பில்லிங் செக்ஷனில் தகவல் தெரிவித்த போது, அவர்கள் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்ததாக தெரிவித்தார். பிறகு தனக்கு வயிறு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்றால் அதற்கு அந்த ஹோட்டல் தான் காரணம் என தெரிவித்தார். ஹோட்டல் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பாஸ் கோரிக்கை வைத்தார்.
