அம்மா உணவகத்தில் பல்லி.. 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!

திண்டிவனம் அருகே இயங்கி வரும் அம்மா உணவகத்தில் உள்ள உணவில் பல்லி இருந்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட அம்மா உணவகம் ஏழை எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது என்பதும் மிக குறைந்த விலையில் தரமான உணவுகள் அளிக்கப்பட்டு வந்தன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்து திமுக ஆட்சி நடைபெற்ற போதிலும் அம்மா உணவகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள செஞ்சி ரோட்டில் உள்ள ஒரு ஒரு அம்மா உணவகத்தில் இன்று காலை ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அந்த உணவில் பல்லி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் அம்மா உணவகத்தில் இருந்த நிர்வாகிகளிடம் அவர் இது குறித்து கூறிய போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உணவுகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன. அதுமட்டுமின்றி பல்லியை பார்த்த நபர் உள்பட 10 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.