காலை உணவில் பல்லி; ஓட்டல் ஊழியர்களுடன் ஊராட்சிமன்ற தலைவர்கள் கடும் வாக்குவாதம்!

காலை டிபனில் பல்லி கிடந்ததால் வாடிக்கையாளர்கள் ஓட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சிவகங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் செயல்படும் தனியார் உணவகத்தில் தஞ்சாவூரில் இருந்து அலுவல் சுற்றுபயனமாக வந்த ஊராட்சிமன்ற தலைவர்கள் பலர் ஹேட்டலுக்கு வந்து
டிபன் சாப்பிட்டு உள்ளனர் .

உணவை சாப்பிடும் போது பல்லி கிடந்ததால் அருவருப்பு அடைந்து உணவக ஊழியர்கள் முறையிட்டு உள்ளார். ஊழியர்கள் பல்லி கிடந்ததை மறைக்க முயற்சித்ததால் உணவு சாப்பிட்ட பலரும் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

சம்பவம் அறிந்து போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வந்து சோதனை செய்தனர் வாக்குவாதம் செய்தவர்களை சமாதானம் செய்து விசாரணை நடத்தினர். ஹோட்டல் ஊழியர்கள் கடையை அடைத்து விட்டு வெளியேறினர். இதனால் பரபரப்பு எற்பட்டது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment