லிவ்-இன் ரிலேஷன்ஷிப்: இளம்பெண்ணை கதற கதற வாளால் வெட்டிய காதலவன்!

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கும் நிலையில் தற்கால இளைஞர்களில் சிலர் திருமண பந்தத்தை மறந்துவிட்டு லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் இஷ்டப்படும் வரை வாழ்ந்து விட்டு அதன் பின் பிரிந்து விட்டு வேறு ஒருவருடன் வாழ்ந்து வரும் கலாச்சாரம் தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கேரளாவில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த இளம் பெண் ஒருவரை அவரது காதலன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

liveinகேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் ராஜேஷ் மற்றும் சிந்து ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்துள்ளனர். முதலில் ரொமான்ஸ் உடன் வாழ்ந்த இவர்கள் அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை போட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இருவருக்குமிடையே சண்டை தீவிரம் அடைந்ததை அடுத்து ராஜேஷ் தனது காதலி சிந்துவை வாள் போன்ற ஒரு ஆயுதத்தால் கதற கதற வெட்டிக் கொலை செய்ததாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ராஜேஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த விசாரணையில் ராஜேஷ் மற்றும் சிந்துவுக்கு இடையே என்ன பிரச்சனை நடந்தது என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. இருப்பினும் அற்ப காரணங்களுக்காக தான் அடிக்கடி இவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.