பத்துதல படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் லிட்டில் சூப்பர் ஸ்டார்! எப்போது தெரியுமா?
பல்வேறு தோல்விகள் சர்ச்சைகள் வந்தாலும் இன்றளவும் மக்கள் மத்தியில் குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் நீங்காமல் நிலைத்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம் பேக்காக அமைந்துள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன்பு வேல்ஸ் யூனிவர்சிட்டி சார்பில் நடிகர் சிம்புவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனால் தொடர் ஆனந்த மழையில் சிம்புவும், சிம்புவின் ரசிகர்களும் உள்ளனர்.
இந்த நிலையில் அவர் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பின்னர் பத்து தல என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் அடுத்தடுத்த சிம்புவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகி கொண்டே வருகிறது. இந்த நிலையில் பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சிம்புவும் கலந்து கொள்ளும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 1ஆம் தேதி முதல் பத்து தல படப்பிடிப்பில் நடிகர் சிம்பு கலந்து கொள்ள உள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் உள்ளனர். பத்துதல திரைப்படத்தினை இயக்குனர் கிருஷ்ணா இயக்கவுள்ளார். இதனால் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு அடுத்த அடுத்த படத்திற்காக காத்துக் கொண்டுள்ளனர்.
