தீ வைத்து கொளுத்திய கொடூர தந்தை! சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழப்பு!!

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கொடூர சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் அரங்கேறியது. அது என்னவெனில் தின்பண்டத்தை திருடியதால் சிறுமிகள் மீது தீ வைத்துள்ளார் கொடூர தந்தை. இவர் அந்த குழந்தைகளுக்கு வளர்ப்பு தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தீ

அதன்படி வளர்ப்புத் தந்தை அந்தோணி ராஜ் மூன்று குழந்தைகளை தீ வைக்க முயன்ற போது இரண்டு குழந்தைகள் தப்பி ஓடின. இதில் ஒரு குழந்தை மட்டும் அவரின் கொடூர செயலுக்கு சிக்கியது.

வளர்ப்பு தந்தையால் தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் வேதனை அளித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி அருகே காவல்கிணறு பகுதியில் வளர்ப்பு தந்தையால் தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமி,  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மகேஸ்வரி நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சிறுமிக்கு பத்து வயதுதான் ஆவதும் குறிப்பிடத்தக்கது. சிறுமி உயிரிழந்ததை தொடர்ந்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸ் விசாரித்து வருகிறது. தீவைத்த போது காயமடைந்த சிறுமியின் வளர்ப்பு தந்தை அந்தோணிராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment