தாய்லாந்து சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு;; ‘இண்டிகோ நிறுவனம்’-விமான சேவை தொடக்கம்…!
இந்தியாவில் கொரானாவின் பாதிப்பு குறைந்து கொண்டு வருகிறது. இதனால் இந்திய அரசாங்கம் விதித்த ஒவ்வொரு கட்டுப்பாடுகளையும் மெல்ல மெல்ல திரும்ப பெறப்பட்டு வருகிறது.
அதுவும் குறிப்பாக சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்ட வழிமுறைகள் அனைத்தும் மெல்ல மெல்ல தளர படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாய்லாந்து சுற்றுலாப் பிரியர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை கூறியுள்ளது.
அதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் இருந்து தாய்லாந்து விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ளது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டும் தாய்லாந்து வரலாம் என்று தாய்லாந்து அரசு அறிவித்திருந்தது.
இதனையடுத்து மும்பை, கொல்கத்தா, டெல்லி , சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து பாங்காக் நகருக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் இருந்து டிக்கெட் திவிற்கும் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
தாய்லாந்து செய்பவரிடம் கொரானா நெகட்டிவ் சான்றிதழ் கூறப்பட்டாலும், அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாய்லாந்து வருவோருக்கு விமான நிலையத்திலும், பின் 5 நாட்கள் கழித்தும் என இரண்டு முறை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
