Connect with us

இந்த மாதம் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ! ஒரே நேரத்தில் இத்தனை படங்களா?

IMG 20180311 WA0041

பொழுதுபோக்கு

இந்த மாதம் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ! ஒரே நேரத்தில் இத்தனை படங்களா?

தமிழ் சினிமாவின் ஒவ்வொரு வாரமும் பல படங்கள் வெளியாகி வருகிறது, சில முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்தும் தீபாவளி, பொங்கல் , புத்தாண்டு என சிறப்பான நாட்களில் வருவதும் வழக்கம். அந்த வகையில் இந்த மாதம் பட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளி வர தயாராக உள்ளது.

maxresdefault 4

‘ யாமிருக்க பயமேன்’ படத்தின் இயக்குநர் டீகே இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘ காட்டேரி’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.

இதில் ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார் ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்திருக்கின்றனர்.படத்தின் வைபவ், கருணாகரன், நடிகைகள் சோனம் பஜ்வா, மனாலீ, பொன்னம்பலம், ரவி மரியா, மைம் கோபி, ஜான் விஜய், லொள்ளு சபா மனோகர், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

whatsappimage2021 10 15at10 58 59am 1634281816

அடுத்ததாக அதர்வா நடிக்கும் குருதியாட்டம் படமும் நாளை வெளியாக உள்ளது,8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீகணேஷ் இந்த படடர்த்தி இயக்கியுள்ளார்,அதர்வா ஜோடியாக இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா, ராதாரவி, வத்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நாளை
ஆகஸ்ட் 5ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் ரிலீசாகவுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தை ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரித்துள்ளது.

maxresdefault 3

அடுத்தவாரம் இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் தேஜாவு படத்தை தொடர்ந்து அருள்நிதி நடிக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் டைரி. கிரைம் திரில்லர் ஜோனரில், டைரி படம் உருவாக்கப்பட்டுள்ளது.அருள்நிதிக்கு ஜோடியாக பவித்ரா நடித்திருக்கிறார்.

கிஷோர், ஜெயப்பிரகாஷ், தணிகை உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். ரோன் யோகன் இசையமைத்துள்ள இந்த படத்தை, கதிரேசன் தனது 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது.

download 10

அடுத்ததாக முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில் யசோதா படம் வெளியாகவுள்ளது, ஆகஸ்ட் 12ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது.

அறிமுக இயக்குனர்களான ஹரி-ஹரிஷ் கூட்டணியில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் சமந்தா எழுத்தாளராக நடித்துள்ளார்.

அதை தொடர்ந்து அதே நாளில் முத்தையா இயக்கத்தில், இரண்டாவது முறையாக கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் நடித்திருக்கும் படம் விருமன். விருமன் திரைப்படத்தில் கார்த்தியுடன் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகிறது.

dhanush thiruchitrambalam movie release date exclusive update photos pictures stills

அடுத்ததாக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நான்காவது முறையாக நடிகர் தனுஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், பாரதிராஜா என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Pisasu 2 1 1536x757 1

அடுத்த்தாக இயக்குனர் மிஷ்கினின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிசாசு 2 இல் ஆண்ட்ரியா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார் பிசாசு 2 இன் துணை நடிகர்களில் பூர்ணா (அக்கா) ஷாம்னா காசிம், குக் வித் கோமாளி புகழ் சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் உள்ளனர். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு சிறப்பு கேமியோவில் நடிக்கிறார்.

குட்டி டிரஸ் போட்டு குழந்தை போல பிறந்தநாள் கொண்டாடிய யாஷிகா! வைரல் வீடியோ!

 

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top