Connect with us

ஓணம் கொண்டாட்டம்: ஒரே வாரத்தில் கோடியில் மது விற்பனை..!

onam

செய்திகள்

ஓணம் கொண்டாட்டம்: ஒரே வாரத்தில் கோடியில் மது விற்பனை..!

மகாபலி வருகையை முன்னிட்டு கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையானது நாடுமுழுவதும் செப்டம்பர் 8-ம்தேதி கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், நடப்பாண்டில் கொரோனா கட்டுப்பாடுகள் ஏதுமின்றி ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடினர்.

இதற்கிடையில் கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மது விற்பனையானது களைகட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் படி, ரூ. 624 கோடி-க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கேரள மதுபான விற்பனை கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

குறிப்பாக கொல்லம் ஆசிரம விற்பனை கடையில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 1 கோடியே 5 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்தாண்டு ஒரே நாளில் ரூ.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்ற நிலையில், இந்தாண்டு கூடுதலாக ரூ.32 கோடி விற்பனையானதாக கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top