#Breaking இனி கல்யாண மண்டபத்திலும் சரக்கு கிடைக்கும்… தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு!

மதுபானங்களை திருமண நடைபெறும் மண்டபம் மற்றும் விளையாட்டு மைதானங்களில் பயன்படுத்த தமிழக அரசு லைசன்ஸ் வழங்க முடிவு செய்துள்ளது.

உள்துறை செயலாளர் பன்னீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசிதழில், தற்போது வரை உள்ள லைசென்ஸ் பார்களிலும் ஸ்டார் ஹோட்டல்களிலும் மட்டுமே மதுபானங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் புதிதாக ஒரு நாள் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு கூட அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம் என புதிய சட்ட திருத்தம் அரசிதழில் வெளியாகி உள்ளது

மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்று மதுவிலக்கு துறை துணை ஆணையர்கள் எஸ் எல் 12 என்ற சிறப்பு அனுமதியை வழங்கலாம் எனவும் அந்த சட்ட திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கட்டணங்கள் எவ்வளவு என்பது குறித்தும் அந்த அறிவிப்பில் வெளியாகியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.