ஆதாருடன் EB நம்பர் இணைப்பது கட்டாயம் – மின்சார வாரியம் அறிவிப்பு!!!

நம் தமிழகத்தை பொறுத்தவரையில் மின் மோசடிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இவற்றை தடுக்க தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜிக்கு கிரீன் சிக்னல்! பாஜக நிர்மலுக்கு ஐகோர்ட் செக்!!

இதன் மூலம் நுகர்வோர்கள் பயன்படுத்திய மின் இணைப்பு குறித்து கண்டறிய முடியும் எனவும் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுபவர்கள் கட்டாயம் ஆதார் எண் இணைப்பது அவசியம் என கூறியுள்ளது.

இருப்பினும் தொழிற்சாலைகள் மற்றும் மானியம் பெறாத மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment