பான் மற்றும் ஆதார் எண் இணைப்பது நாளையுன் நிறைவு: தவறினால் ரூ.1,000 அபராதம் !!

ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு நாளையுடன் கெடு நிறைவடைவதாகவும் இதனை தவறும் பட்சத்தில் ரூ.1000 அபராதம் விதிக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் பான் கார்டு முடக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க நிதி மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டே வந்தது. இந்த சூழல் மார்ச் 31 ஆம் தேதி வரை ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குறிப்பிட்ட கால அவசாகத்திற்குள் இரண்டு எண்களையும் இணைக்க தவறும் பட்சத்தில் வருமான வரி சட்டத்தின் கீழ் அதற்கான பின்விளைவுகளை பார்க்க கூடும் என வருமான வரித்துறை சமீபத்தில் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் வங்கி கணக்கை தொடங்குவது, ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பிப்பது போன்றவற்றிற்கு பான் எண்ணை பயன்படுகிறது. நிதி மோசடிகளைத் தடுக்க  ஒரு முக்கியமான அடையாள ஆவணமாக திகழ்கிறது.

மேலும், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தால் அல்லது பணத்தை எடுத்தால் பான் எண் அவசியம் என்பதால் ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment