மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு வழக்கில் திடீர் திருப்பம்!!

தமிழகத்தில் உள்ள வீடுகளில் 100 யூனிட் மின்சாரத்தை தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தை பெறுவதற்கு மின் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது அவசியம் என கடந்த அக்டோபர் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆதார் எண் என்பது ஒரு வீட்டிற்கு மட்டுமே மேற்கொள்ளப்பட முடியும் எனவும், வாடகை வீட்டு தாரர்கள் ஆதார் எண்ணை இணைத்தால் அவர்கள் காலி செய்த பிறகு புதிய நபர்கள் வரும் போது ஆதாரை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்த போதிலும் இதற்கு பதிலாக வேறு ஆவணங்கள் சமர்பிக்கலாம் என தெரிவிக்கவில்லை என மனுவில் கூறப்பட்டது.

அதே போல் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்காவிட்டால் மானியம் வழங்கப்பட மாட்டாது என சட்டத்தில் எந்த ஒரு வழிவகைகளும் இல்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் மின் இணைப்புடம் ஆதார் எண்ணை இணைக்கும் போது வீட்டு உரிமையாளர் எண்ணை இணைப்பதால் வாடகை தாரர்களுக்கு கிடைக்காது என வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாடகைதாரர்கள் மானியம் பெறுவது என்பது வீட்டு உரிமையாளர், வாடகைதாரர் இடையே உள்ள பிரச்சனை என கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை பொருத்தவரையில் எந்தவித ஆதாரமும் இல்லாததால் தள்ளுபடி செய்து உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.