மின் எண்ணுடன் ஆதாரை இணைப்பு; மேலும் ஒருமாதம் நீட்டிப்பு!!

மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் ஒருமாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன் ஒரு பகுதியாக கடந்த சில மாதங்களுக்கு முன் மின்சார வாரியம் ஆதார் எண் இணைப்பது அவசியம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

கடலுக்குள் பேனா சின்னம்.. ஜன.31ம் தேதி கருத்து கேட்பு கூட்டம்!!

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்திய நிலையில் மின்நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில் மின் எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் ஒருமாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஜனவரி 31ம் தேதிக்குள் மின் எண்ணுடன் ஆதாரை இணைக்கலாம் என்றும் நாளை மறுநாள் முதல் ஜன.31ம் தேதி வரை நடமாடும் சிறப்பு முகாம்கள் நடைப்பெறுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

பீதியில் பொதுமக்கள்; ஜப்பானில் ஒரே நாளில் 420 பேர் பலி..!!

இத்தகைய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தமிழகத்தை பொறுத்த வரையில் சுமார் 1.60 கோடி பேர் மின் எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.