Connect with us

அடி ஆத்தி..! இப்படியுமா எக்ஸாமுல காப்பி அடிப்பாங்க…

எக்ஸாம்

செய்திகள்

அடி ஆத்தி..! இப்படியுமா எக்ஸாமுல காப்பி அடிப்பாங்க…

அடி ஆத்தி..! இப்படியுமா எக்ஸாமுல காப்பி அடிப்பாங்க…

பொதுத் தேர்வுகளில் காப்பி அடிப்பது என்பது தேர்வு கண்டுபிடித்த காலகட்டத்தில் இருந்தே தொடர்ந்து நடைபெற்று வருகிறது . இதனைத் தடுக்க பறக்கும் படையினரின் அனுமதிக்கப்பட்ட பின்னரும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சில குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக விடைகளை பார்த்து எழுதுவதற்கு பதிலாக பல மாணவர்கள் செல்போன்களை மறைத்துக் கொண்டு செல்வது, ப்ளூடூத் ஹெட்போனை பயன்படுத்துவது  போன்ற பல நூதன வேலைகளை பயன்படுத்தி மாணவர்கள் சிக்குவார்கள்.

அந்த வரிசையில் ஹரியான மாநிலத்தில் உள்ள மாணவர் ஒருவர் கண்ணாடியிலான தேர்வு அட்டையினை பயன்படுத்தியுள்ளார். அதில் செல்போனை மறைத்து வைத்து வாட்ஸ் அப்பை ரெடியா வைத்துள்ளார்.

இந்நிலையில்  மெதுவாக செல்போன்களை பார்த்து விடைகளை எழுதிகொண்டிருக்கும் நிலையில் திடீரென தேர்வு அறைக்குள் புகுந்த பறக்கும் படையினர் மாணவனின் தேர்வு அட்டையை சோதனை செய்தனர். அதில் செல்போன் மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்ட மாணவன் மீது பள்ளி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top