Tamil Nadu
ரஜினி போல் கமலும் அரசியலில் இருந்து விலக வேண்டும்: உதயநிதி
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகியதைப்போலவே கமல்ஹாசனும் அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக சொல்லிவிட்டு திடீரென தனது உடல்நிலையை கணக்கில் கொண்டு அரசியல் கட்சி தொடங்க வில்லை என்று சமீபத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ரஜினிகாந்த் அரசியல் இருந்து விலகியது போல் கமல்ஹாசனும் விலக வேண்டும் என்று தெரிவித்திருந்தார்
உதயநிதியின் இந்த கருத்துக்கு பதில் கூறிய கமல்ஹாசன் உதயநிதியின் விருப்பத்திற்கு ஏற்றபடி என்னால் செயல்பட முடியாது என்றும், அது அவருடைய பிரார்த்தனை என்றும், அதனை தன்னால் ஏற்று கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். உதயநிதியின் கோரிக்கையும் கமல்ஹாசனின் பதிலடியும் தற்போது வைரலாகி வருகிறது
