இது என்னப்பா புதுசா இருக்கு! நடுக்கடலில் மின்னல் தாக்கி உயிரிழப்பா?

தமிழகத்தில் தற்போது மழைக்காலம் நிகழ்கிறது. இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல பெய்து வருகிறது. பொதுவாக மழைக்காலம் தொடங்கினால் மீனவர்களுக்கு பிரச்சனை உருவாகும்.உயிரிழப்பு

ஏனென்றால் மீனவர்கள் கடலில் சென்று மீன் பிடிக்க முடியாத நிலைமை உருவாகும். கடல் அலைகளும் மிகுந்த சீற்றத்துடன் காணப்படும். அவ்வாறு இருந்தும் மீனவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்தும் கடலுக்கு சென்று மீன் பிடிப்பர்.

ஆனால் தற்போது கடலுக்கு சென்று மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பலருக்கும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.

ஏனென்றால் மழைக்காலத்தில் இடிக்கும் மின்னல் ஆனது பொதுவாக நிலப்பகுதியில் உயிரிழப்பை உண்டாக்கும். இவ்வாறிருக்கையில் கடல்பகுதியில் மின்னல் வெட்டி மீனவர் உயிரிழந்தது மீனவர் குடும்பத்தில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அருகில் வெள்ளைப்பட்டியில் கடலில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் அந்தோணி.  எதிர்பார்க்காத சமயத்தில் மின்னல் தாக்கியதில் அந்தோணி பரிதாபமாக நடுக்கடலில் உயிரிழந்துள்ளார்.

நடுக்கடலில்  மின்னல் தாக்கி மீனவர் அந்தோணி உயிரிழந்தது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட தாளமுத்து நகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment