வீட்டிலிருந்து தீயசக்திகள் விலகி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்க… இதை மட்டும் செய்தால் போதும்…!

வீடுகளில் மாலை நேரமாகி விட்டால் விளக்கேற்றி வழிபடுகிறோம். நம் வீட்டிற்கு வரும் மருமகளை இந்த வீட்டின் மகாலெட்சுமியே நீ தான் என்கின்றனர்.

வீட்டுக்கு விளக்கேற்றுவதால் ஒரு பெண்ணை மகாலெட்சுமியாக நினைத்து பெருமைப்படுகிறோம். விளக்கேற்றுவதால் வீட்டிற்கு என்னென்ன நன்மைகள்? நமக்கு என்னென்ன பலன்கள் என்று பார்ப்போமா…

பாசிட்டிவ் எனர்ஜி

விளக்கில் இருந்து வரும் ஒளிச்சுடர் எப்போதும் நமக்கு பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கச் செய்யும். சுற்றுப்புறத்தில் உள்ள தீய சக்திகள் விலகி ஓடும். வீட்டில் விளக்கேற்றாமல் இருக்கும்போது இந்த மாற்றம் நமக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து விடும். எதையோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வைத் தரும்.

வீட்டில் உள்ள எல்லோரும் பேய் அறைந்தாற்போல காணப்படுவர். எதற்காக சோகம் என்றே தெரியாமல் கனத்த மனதுடனே எப்போதும் சோர்வுடன் இருப்பர்.

தத்துவம்

நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. பொதுவாகவே நெய் தீபம், சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலனையும் தருகிறது.

திருவிளக்கை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. ஆனால், பொதுவாக மாலை நமது மரபு. இதை கருக்கல் அல்லது அந்தி சாயும் நேரம் என்பர். சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுச்சூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பிருக்கிறது.

பிரகாசமான ஒளியின் முன் அந்த தீய சக்திகள் விலகி ஓடி விடும். இதனால் தான் வீட்டில் கருக்கல் நேரத்தில் விளக்கேற்றி சாமி கும்பிடுகிறோம்.

Lighting girl
Lighting girl

தியானம் செய்வதற்கு விளக்கை ஏற்றி அந்தத் தீபச்சுடரை உற்று நோக்கலாம். இது சிறந்;த பலனைத் தரும். மன அமைதிக்கும் வழிவகுக்கும். தினமும் ஒரு 10 நிமிடமாவது இது போன்று செய்து வந்தால் நமக்குள் ஒரு இனம்புரியாத நிம்மதி உருவாகும். நாம் நம் ஆழ்மனதுடன் பேச ஆரம்பித்து விடுவோம். அதன்பிறகு செய்யும் செயல்கள் எல்லாம் வெற்றியின் அம்சமாகவே இருக்கும்.

விளக்கு ஏற்றுவதின் மகத்துவத்தை நாம் சில இடங்களுக்குச் செல்கையில் உணரலாம். பேரானந்தத்தைத் தருவதையும் பார்க்கலாம். கோவில்களில் எப்போதும் விளக்கு எரிந்து கொண்டிருக்கும். சில கோவில்களில் அணையா விளக்கு எரிவதையும் பார்க்கலாம்.

நிகழ்ச்சிகளைத் தொடங்குவதற்கு முன் குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பிப்பார்கள். ஏன் என்றால் அதைப் போன்று நிகழ்ச்சி பிரகாசமாக இருக்க வேண்டும். அந்த நிறுவனமும் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான் இதன் தாத்பரியம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews