Connect with us

தமிழகத்தில் இன்றும் கனமழை நீடிக்கும்..!! அடுத்த நான்கு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை?

மழை

செய்திகள்

தமிழகத்தில் இன்றும் கனமழை நீடிக்கும்..!! அடுத்த நான்கு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை?

தமிழகத்தில் இன்றும் கனமழை நீடிக்கும்..!! அடுத்த நான்கு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை?

தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு வருகிறது. அதுவும் கோடைக்காலம் தமிழகத்தில் தொடங்கிய பின்னர் அடுத்தடுத்து தென் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் இதமான வானிலையே உருவாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த கனமழை இன்றும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் இன்றைய தினமும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நாளை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தலைநகர் சென்னையில் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தகவல் கூறியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக உத்தமபாளையத்தில் ஏழு செண்டி மீட்டர் மழையும் ஊத்துக்குளி, பாலவிடுதியில் தலா ஐந்து சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top