தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் (ஆர்எம்சி) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும். ஒரு சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கலாம்.
முன் பருவநிலை மாற்றம் – புதிய திட்டங்கள் : ஸ்டாலின்
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக தெளிவாக இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 34°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23°C ஆகவும் இருக்கும்.