Connect with us

அகமதாபாத்தில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து: 8 தொழிலாளர்கள் பலி!!

death 1

செய்திகள்

அகமதாபாத்தில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து: 8 தொழிலாளர்கள் பலி!!

கடந்த சில நாட்களாகவே விபத்துக்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தகைய விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தப்போதிலும் இன்னும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் அகதாபாத்தில் லிப்ட் அறுந்து விழுந்ததில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத் மாநிலம் அகதாபாத்தில் புதிதாக கட்டம் ஒன்று கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கட்டுமானப்பணி நடைப்பெற்று வந்த நிலையில், திடீரென எதிர்பாராத விதமாக லிப்ட் அறுந்து விழுந்தது. இதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் 8 தொழிலாளர்களின் உடலை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதே போல் சிலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியானது தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top