விஷுக்கனி காணுதல்ன்னா என்னன்னு தெரியுமா?!

தமிழ் வருடப்பிறப்பை தமிழர்கள் மட்டுமல்ல கேரள மக்கள் விஷுக்கனி காணுதல் என்றும், வங்காளத்தில் நாபா பர்ஷா என்றும், அசாமில்ரொங்காலில் பிஷு என்றும், சீக்கியர்கள் முதலான வட இந்தியர்கள் பைசாகி என்றும் இந்நாளை கொண்டாடுகின்றனர். விஷு என்றால் ஆண்டுப்பிறப்பு. கேரளாவில் சித்திரை முதல் நாளை சித்திரை விஷு எனக் கொண்டாடுகின்றனர். பங்குனி 31 அன்று பூஜையறையில் மனையில் ஒரு கண்ணாடியை வைத்து அதன்முன் நிறைநாழி நெல் அதன்மீது தென்னம்பாளை வைப்பர். பஞ்சபூதங்களை உணர்த்தும் விதமாய் பஞ்சலோகத்தால் ஆன உருளியில் வாழை, பலா, மா உள்ளிட்ட பழவகைகள், கொன்னைப்பூ உள்ளிட்ட
 
விஷுக்கனி காணுதல்ன்னா என்னன்னு தெரியுமா?!

தமிழ் வருடப்பிறப்பை தமிழர்கள் மட்டுமல்ல கேரள மக்கள் விஷுக்கனி காணுதல் என்றும், வங்காளத்தில் நாபா பர்ஷா என்றும், அசாமில்ரொங்காலில் பிஷு என்றும், சீக்கியர்கள் முதலான வட இந்தியர்கள்  பைசாகி என்றும் இந்நாளை கொண்டாடுகின்றனர்.  

விஷுக்கனி காணுதல்ன்னா என்னன்னு தெரியுமா?!

விஷு என்றால் ஆண்டுப்பிறப்பு. கேரளாவில் சித்திரை முதல் நாளை சித்திரை விஷு எனக் கொண்டாடுகின்றனர்.  பங்குனி 31 அன்று பூஜையறையில் மனையில் ஒரு கண்ணாடியை வைத்து அதன்முன் நிறைநாழி நெல் அதன்மீது  தென்னம்பாளை வைப்பர்.  பஞ்சபூதங்களை உணர்த்தும் விதமாய் பஞ்சலோகத்தால் ஆன உருளியில்  வாழை, பலா, மா உள்ளிட்ட பழவகைகள், கொன்னைப்பூ உள்ளிட்ட பூக்கள், இனிப்புகள், தங்கநகைகள், பணம் வைத்து உறங்கிவிடுவர். வீட்டின் மூத்த பெண்கள் தூங்கி எழுந்து இப்பொருளை பார்த்து குளித்து பூஜையறையில் விளக்கேற்றுவர். பின் ஒவ்வொருவராக எழுப்பி, அவர் கண்களை கைகளால் மூடி பூஜையறையிலுள்ள கண்ணாடியில் இப்பொருளை பார்க்க வைப்பர். இதையே விஷுக்கணி காணுதல் என அழைப்பர். 

விஷுக்கனி காணுதல்ன்னா என்னன்னு தெரியுமா?!

கேரள செல்வந்தர்கள்  தங்கள்  வயலில் வெளியாட்களை நியமித்து விவசாயம் செய்தனர். வயலில் விளைந்த பொருட்களை மாலையில்  வயலுக்கு சொந்தமானவர் வீட்டில் கொண்டு  வந்து சேமிப்பர். செல்வந்தரும் அவர்தம் குடும்பத்தாரும் காலையில் இவ்விளைப்பொருட்களைப் பார்த்து மகிழ்வர்.  பாடுபட்டு உழைத்த பணியாளர்களுக்கு  மனமுவந்து பணமும், பொருளுமாய் அள்ளி தந்தனர். இதுவே பின்னாளில் விஷுக்கனியாவும், கைநீட்டமுமாய் மாறியது எனவும் சொல்வதுண்டு.  காலையில் விளைப்பொருட்களை காணுதன் ”கனி காணுதல்” எனவும், பணியாட்கள் பரிசுப்பொட்களை கை நீட்டி வாங்குவதால்  “கை நீட்டம்” எனவும் அழைக்கப்பட்டது.From around the web