தலைவாசலில் தலை வைத்து படுத்தால் இந்த நிலைதான்..

என்னதான் கோடிகோடியாய் கொட்டி வீட்டை அலங்கரித்தாலும் வீட்டிற்கு தலைவாசல் முக்கியமானது. விசேச தினங்களில் தலைவாசலுக்கு மஞ்சள் தேய்த்து குங்குமம் வைக்க வேண்டும். மாவிலை தோரணம் கட்டி, பூமாலை அல்லது பூக்கள் கொண்டு அலங்கரிப்பது நமது வழக்கம். இதில்லாமல் தலைவாசலில் சில விசயங்களில் வெளியில் சென்று வீடு திரும்பும்போது தெருவில் உள்ள மண், தூசி, அழுக்குகளை வீட்டுக்குள் வரும்முன் துடைத்துக்கொண்டு வர மிதியடிகளை போடுவது வழக்கம். அவை சிவப்பு வண்ணத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். சிவப்பு வண்ணம் பாசிட்டிவ் எனர்ஜியை
 

என்னதான் கோடிகோடியாய் கொட்டி வீட்டை அலங்கரித்தாலும் வீட்டிற்கு தலைவாசல் முக்கியமானது. விசேச தினங்களில் தலைவாசலுக்கு மஞ்சள் தேய்த்து குங்குமம் வைக்க வேண்டும். மாவிலை தோரணம் கட்டி, பூமாலை அல்லது பூக்கள் கொண்டு அலங்கரிப்பது நமது வழக்கம். இதில்லாமல் தலைவாசலில் சில விசயங்களில்

வெளியில் சென்று வீடு திரும்பும்போது தெருவில் உள்ள மண், தூசி, அழுக்குகளை வீட்டுக்குள் வரும்முன் துடைத்துக்கொண்டு வர மிதியடிகளை போடுவது வழக்கம். அவை சிவப்பு வண்ணத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். சிவப்பு வண்ணம் பாசிட்டிவ் எனர்ஜியை தக்கவைக்கும். இதன் காரணமாகத்தான் சிவப்பு கம்பள வரவேற்பு முக்கியமான கௌரவமாக கருதப்படுகிறது.

தலைவாசலை வாஸ்துப்படி அமைப்பது சிறப்பான பலனை தரும். இழைத்து, இழைத்து பலவித கனவுகளோடு வீட்டை கட்டி குடியேறினாலும், தலைவாசல் சரியான விதத்தில் அமைக்கப்படவில்லையென்றால் அவ்வீட்டில் மகாலட்சுமி நுழைய மாட்டாள். மகிழ்ச்சி தங்காது. மொத்தத்தில் அவ்வீட்டில் எந்த நன்மையும் வந்து சேராது. தலைவாசல் தீய சக்திகளை வாசலோடு தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்டது. அதனால்தான், வீடு கட்டும்போது தலைவாசல் பொருத்தும்போதும், புதுவீடு கட்டி குடியேறும்போதும் தலைவாசலுக்கு பூஜைகள் செய்வது வழக்கம். நிலை வாசற்படியானது, நல்ல சக்திகளை உள்ளே ஈர்த்து, கெட்ட சக்திகளை திருப்பி அனுப்ப வேண்டுமென்றால், நாம் அதனை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

அஷ்ட லட்சுமிகள்

நம் வீட்டுத் தலைவாசல் பகுதி என்பது அந்தக் காலங்களில், வீட்டின் உள்ளே செல்பவர்கள் தலை குனிந்து செல்லும் அளவிற்கு தாழ்வாக தான் அமைந்திருக்கும். நம் வீட்டு வாசற்படியில் மகாலட்சுமியும், அஷ்ட லட்சுமியும் குடி கொண்டிருப்பதாலும், கும்ப தேவதைகள் வாசலில் இரண்டு பக்கமும் அமர்ந்திருப்பதாலும், அவர்களை நாம் வணங்கும் வகையில், தலையை குனிந்து செல்வதற்காகவே அப்படிப்பட்ட அமைப்பு அந்த காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அப்படி நாம் குனிந்து செல்லும்போது அந்த வாசற்படியை நம் கால்களால் மிதிக்காமல் உள்ளே செல்ல வேண்டும்.

தலைவாசலில் லட்சுமியும், அஷ்டலட்சுமிகளும் குடியிருப்பதுப்போல, வாசல் கதவில் குலதெய்வம் குடியிருக்கும் என்பது நம்பிக்கை. அதனால்தான் நம் முன்னோர்கள் கதவினை சத்தம் போடாமல் திறக்க, மூட செய்ய சொல்வார்கள். நம் கூக்குரலுக்கு ஓடிவர நமது குலதெய்வம் கதவில் காத்திருக்கும். அதனால், கதவை காலால் உதைப்பதும், திறப்பதும் கூடாது. ஒரு கிண்ணத்தில் நீர் நிரப்பி அதில் புத்தம்புது மலர்களை கொண்டு அலங்கரிப்பது நல்ல சக்தியை வீட்டினுள் கிரகிக்க செய்யும். தினமும் புது மலர், தண்ணீர் கொண்டு அலங்கரிக்க வேண்டும். பிளாஸ்டிக் மலர் கொண்டு அலங்கரிக்கக்கூடாது. வெளியில் சென்றுவிட்டு கால் அலம்பாமல் வீட்டினுள் வரக்கூடாது. இது சேறு, சகதி, கிருமிகளை வீட்டினுள் கொண்டு வருவதை தவிர்க்கும்.

தலைவாசலில் தலை வைத்து படுப்பது, வாசற்படியில் அமர்ந்து ஊர் கதை பேசுவது, தலைவாசலில் நிற்பது, தலைவாசலில் தும்புவது மாதிரியான செயல்களை செய்வது கூடாது. இவற்றின்மூலம் தேவையற்ற சக்திகளை நாமே வீட்டினுள் அழைத்து சென்று அல்லல்பட நேரிடும்.

From around the web