தக்காளி சாஸை இப்படியும் பயன்படுத்தலாம்!!

நீங்கள் உண்ணும் சிக்கன், பர்கர் மற்றும் பீட்சா இப்படி எது எடுத்தாலும் அதற்கு நாம் விரும்பி தொட்டு சாப்பிடுவது இந்த தக்காளி சாஸை தான். சில பேர்கள் இதை விரும்புவதில்லை. அந்த சாஸை வீணாக கீழே போட்டு விடுவார்கள். இப்படி செய்யாமல் அந்த தக்காளி சாஸை சில க்ளீனிங் வேலைக்கு பயன்படுத்தி நாம் பலன் பெறலாம்… தக்காளி இயற்கையாகவே அசிடிக் தன்மை கொண்டது. அதை கெட்ச்அப் ஆக பயன்படுத்தும்போது அதிலுள்ள வினிகரால் ரெம்ப அசிடிக்காக இருக்கிறது. எனவே
 
தக்காளி சாஸை இப்படியும் பயன்படுத்தலாம்!!

நீங்கள் உண்ணும் சிக்கன், பர்கர் மற்றும் பீட்சா இப்படி எது எடுத்தாலும் அதற்கு நாம் விரும்பி தொட்டு சாப்பிடுவது இந்த தக்காளி சாஸை தான். சில பேர்கள் இதை விரும்புவதில்லை. அந்த சாஸை வீணாக கீழே போட்டு விடுவார்கள். இப்படி செய்யாமல் அந்த தக்காளி சாஸை சில க்ளீனிங் வேலைக்கு பயன்படுத்தி நாம் பலன் பெறலாம்…

தக்காளி இயற்கையாகவே அசிடிக் தன்மை கொண்டது. அதை கெட்ச்அப் ஆக பயன்படுத்தும்போது அதிலுள்ள வினிகரால் ரெம்ப அசிடிக்காக இருக்கிறது. எனவே தான் இது சுத்தப்படுத்தும் வேலையை எளிதாக செய்கிறது.

செம்பு, பித்தளை, வெள்ளி பாத்திரங்களை பயன்படுத்துவது நமது வழக்கம். இவற்றை பயன்படுத்துவதால் நன்மை உண்டாகும் அதேநேரத்தில் அவற்றை சுத்தப்படுத்துவது கடினமான விஷயம். தக்காளி சாஸை செம்பு பாத்திரத்தில் தடவி 15-20 நிமிடங்கள் ஊற விடவும். மென்மையான துணியை கொண்டு துடைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் போதும் செம்பு பாத்திரம் பளப்பளக்கும். கறைகள் அதிகம் இருந்தால் அதனுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து கழுவினால் போதும் கறை காணாமல் போகிடும். இதேப்போலவே, பித்தளை, வெள்ளிப்பொருட்களையும் சுத்தம் செய்யலாம். வெள்ளிப்பொருட்களை அதிக நேரம் தக்காளி சாஸில் ஊறவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து விட்டு மறந்து போய் வேறு கவனத்துடன் இருக்கும்போது ப் பாத்திரம் கருகி அடிபிடிச்சிடும். இதை சுத்தம் செய்ய தேய்த்து தேய்த்து கை வலிக்கும். இனி இந்த கவலை இல்லை. அடிப்பிடிச்ச பாத்திரத்தில் நீர் ஊற்றி, அதில் கெட்ச் அப் போட்டு சூடு படுத்த வேண்டும். தண்ணீர் வற்றாத மாதிரி பார்த்து கொள்வது முக்கியம். அப்படி சூடுப்படுத்தியபின் அடுப்பை அணைத்துவிட்டு இரவு முழுவதும் ஊற வைத்து விட்டால் போதும். அடிப்பிடிச்ச கறுப்பை காணாமல் போய்விடும்.

சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு காரை கழுவியபின், துணியில் தக்காளி சாஸை எடுத்து நன்றாக காரின்மேல் தடவி பிறகு மீண்டும் தண்ணீர் கொண்டு அலசினால் பழைய காரும் புதுசுப்போல் ஜொலிக்கும்.

தோட்ட வேலைக்கு பயன்படும் மம்பட்டி, கோடாரி போன்றவைகள் துரு ஏறி இருந்தால், துருப்பிடித்த பகுதியில் தக்காளி சாஸை தடவி தேய்த்து பிறகு கொஞ்சம் நேரம் கழித்து கழுவினால் போதும் துரு போய்விடும். இதையே துருப்பிடிச்ச மற்ற பொருட்களை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். அதிகமான துரு இருந்தால் வாஷிங் சோடா மற்றும் தண்ணீர் சேர்த்து கழுவி அதனுடன் கெட்ச்அப் சேர்த்து தேய்த்தால் போதும் துரு காணாமல் போய்விடும்.

வீட்டில் நாய் வளர்ப்பவருக்கும் இந்த தக்காளி சாஸ் பயன்படும். என்னதான் பார்த்து பார்த்து வளர்த்தாலும் நாய்கள்மீது ஒருவித வாசனை வரும். இதை போக்க தக்காளி சாஸை பயன்படுத்தலாம். இந்த தக்காளி சாஸை ஊற்றி அதில் உங்கள் செல்லப் பிராணியை 10-20 நிமிடங்கள் ஊற வைத்தால் போதும் அதன் மேல் உள்ள துர்நாற்றம் எல்லாம் போய்விடும். பிறகு வளர்ப்பு நாய்க்கான ஷாம்பை பயன்படுத்தி நன்றாக அலசி விட்டால் போதும்.

இப்படி பலவித க்ளீனிங்க் பயன்பாட்டுக்கு தக்காளி சாஸ் பயன்படுது…

From around the web