தயிர் சாதத்திற்கு ஏற்ற சேனைக்கிழங்கு வறுவல்!!
 
தயிர் சாதத்திற்கு பொதுவாக நாம் உருளைக் கிழங்கு வறுவலையே செய்து சாப்பிடுவோம். அந்தவகையில் இப்போது தயிர் சாதத்திற்கு மாற்றாக சேனைக்கிழங்கில் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தயிர் சாதத்திற்கு பொதுவாக நாம் உருளைக் கிழங்கு வறுவலையே செய்து சாப்பிடுவோம். அந்தவகையில் இப்போது தயிர் சாதத்திற்கு மாற்றாக சேனைக்கிழங்கில் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை
சேனைக்கிழங்கு- 250 கிராம்,
புளி- நெல்லிக்காய் அளவு.
மிளகு- 4, 
சீரகம்- 2 ஸ்பூன்,
சோம்பு- 1 ஸ்பூன், 
மிளகாய்த் தூள்- 1 ஸ்பூன்,
பூண்டு- 1
உப்பு- தேவையான அளவு,
மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்,
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை : 
1.    சேனைக்கிழங்கின் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.    அடுத்து தண்ணீரில் புளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிழங்கை ஓரளவு வேகவைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.
3.    அடுத்து மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, உப்பு சேர்த்து தண்ணீர்விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
4.    அரைத்த இந்த பேஸ்ட்டினை சேனைக் கிழங்கு துண்டுகளுடன் சேர்த்து நன்கு ஊறவைத்து தோசைக் கல்லில் போட்டு எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுத்தால் சேனைக்கிழங்கு வறுவல் ரெடி.

From around the web