உடல் சூட்டினைத் தணிக்கும் வெள்ளைப் பூசணி ஜூஸ்!!
 

வெள்ளைப் பூசணி உடல் சூட்டினைத் தணிப்பதாக இருப்பதால் நாம் வெயில் காலங்களில் இதனைத் தவறாமல் எடுத்துக் கொள்ளலாம். இப்போது வெள்ளைப் பூசணியில் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

வெள்ளைப் பூசணி உடல் சூட்டினைத் தணிப்பதாக இருப்பதால் நாம் வெயில் காலங்களில் இதனைத் தவறாமல் எடுத்துக் கொள்ளலாம். இப்போது வெள்ளைப் பூசணியில் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
பூசணிக்காய் - 1 துண்டு
தேங்காய் – கால் மூடி
கறிவேப்பிலை – தேவையான அளவு
இஞ்சி – ¼  துண்டு
உப்பு - தேவையான அளவு

செய்முறை
1. பூசணிக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காயினை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து மிக்சியில் பூசணிக்காய், தேங்காய், கறிவேப்பிலை, இஞ்சி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.
3. அடுத்து வடிகட்டியால் இதனை வடிகட்டினால் வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் ரெடி.


 

From around the web