சர்க்கரை நோயாளிகளுக்கான கோதுமை ரவைக் கஞ்சி!!
 
கோதுமை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைப்பதாய் உள்ளது. இத்தகைய கோதுமையில் இப்போது நாம் ஆரோக்கியம் நிறைந்த ஒரு ரெசிப்பியை செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம்.

கோதுமை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைப்பதாய் உள்ளது. இத்தகைய கோதுமையில் இப்போது நாம் ஆரோக்கியம் நிறைந்த ஒரு ரெசிப்பியை செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம்.

தேவையானவை:
கோதுமை ரவை – 100 கிராம்
பாசிப் பருப்பு – கால் டம்ளர்
தக்காளி- 1
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 
1.    வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
2.    குக்கரில் கோதுமை ரவையினையும் பாசிப் பருப்பினையும் சேர்த்து தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 3 விசில்விட்டு இறக்கவும்.
3.    அடுத்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை வாணலியில் போட்டு வதக்கி அத்துடன் கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, கோதுமை ரவை மற்றும் உப்பு சேர்த்து கிளறி இறக்கினால் கோதுமை ரவை கஞ்சி ரெடி.

From around the web