அனைத்துவகையான டிபனுக்கும் பொருத்தமான தக்காளி தொக்கு!!
 
தக்காளியில் செய்யப்படும் தொக்கு ரெசிப்பியானது இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்துவகையான டிபனுக்கும் நாம் வைத்துச் சாப்பிடலாம். அந்தவகையில் இப்போது நாம் தக்காளியில் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
தக்காளி- 3
வெங்காயம்- 3
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்து- ½ ஸ்பூன்
பூண்டு - 1 
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
மல்லித் தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
1.    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பூண்டை நறுக்காமல் அப்படியே பயன்படுத்தவும்.
2.    அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
3.    அடுத்து மல்லித் தூள், மிளகாய் தூள், உப்பு, மற்றும் தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வேகவிடவும்.
4.    இறுதியாக அதன்மீது கறிவேப்பிலை தூவி இறக்கினால் தக்காளி தொக்கு ரெடி.

From around the web