இட்லி, தோசைக்கு ஏற்ற தக்காளி பச்சடி ரெசிப்பி!!
 
இட்லி, தோசைக்கு மிகவும் பொருத்தமான காம்பினேஷன்களில் ஒன்றுதான் தக்காளி பச்சடியுடனான காம்பினேஷன். இப்போது நாம் தக்காளியினைக் கொண்டு பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 1
கடுகு - 1 டிஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை : 
1.    வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். 
2.    ஒரு பாத்திரத்தில் தக்காளியைப் போட்டு சுடுதண்ணீர் ஊற்றி போட்டு வைக்கவும் . அடுத்து அதன் தோலை உரித்துவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் .
3.    அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி தக்காளி சேர்த்து சுண்டும்வரை வதக்கவும்.
4.    அடுத்து உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் தக்காளி பச்சடி ரெடி.

From around the web