தினத்துக்கும் ஒரேமாதிரி இட்லி சாப்பிட்டு போரடிக்குதா?!

தேவையான பொருட்கள்: இட்லி மாவு – 2 கப்புளிக்காத தயிர் – 5 தேக்கரண்டி ஓமப்பொடி – 3 தேக்கரண்டிமிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டிசீரகத்தூள் – 1/2 தேக்கரண்டிஉப்பு – தேவையான அளவுமல்லித்தழை – சிறிதளவுஅரைக்க: தேங்காய் துருவல் – 3, பச்சை மிளகாய் – 4, முந்திரிப்பருப்பு – 6.தாளிக்க: கடுகு – 1/2 தேக்கரண்டி, பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி, எண்ணெய் – 2 தேக்கரண்டி செய்முறை: இட்லி மாவுக்கு எப்போதும் போல அரைத்து புளிக்க
 
தினத்துக்கும் ஒரேமாதிரி இட்லி   சாப்பிட்டு போரடிக்குதா?!

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு – 2 கப்
புளிக்காத தயிர் – 5 தே‌க்கர‌ண்டி 
ஓமப்பொடி – 3 தே‌க்கர‌ண்டி
மிளகாய்த்தூள் – 1/2 தே‌க்கர‌ண்டி
சீரகத்தூள் – 1/2 தே‌க்கர‌ண்டி
உப்பு – தேவையான அளவு
மல்லித்தழை – சிறிதளவு
அரைக்க: தேங்காய் துருவல் – 3, பச்சை மிளகாய் – 4, முந்திரிப்பருப்பு – 6.
தாளிக்க: கடுகு – 1/2 தே‌க்கர‌ண்டி, பெருங்காயம் – 1/2 தே‌க்கர‌ண்டி, எண்ணெய் – 2 தே‌க்கர‌ண்டி

செய்முறை:

இ‌ட்‌லி மாவு‌க்கு எ‌ப்போது‌ம் போல அரை‌த்து பு‌‌ளி‌க்க வை‌த்த மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்துக் கொள்ளுங்கள். 

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள். 

அத்துடன் கடுகு, பெருங்காயம் தாளித்து உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ளுங்கள். 

பரிமாறும்போது, கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி மல்லித்தழை, ஓமப்பொடி, மிளகாய்தூள், சீரகத்தூள் தூவி பரிமாறலாம். மாதுளை, திராட்சையெல்லாம் சேர்த்தால் கலர்புல்லா இருந்து பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவாங்க. 

From around the web